டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்மித்தின் முதல் இடத்தை காலி செய்யவுள்ள கோலி – விவரம் இதோ

Smith

இந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும் இந்த டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றிய இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிவுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Virat-Kohli

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வங்கதேச அணிக்கு எதிரான தொடர் துவங்கும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்மித்தை விட 25 புள்ளிகள் பின் நிலையில் 2 ஆவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி மோதிய 2வது பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்து 136 ரன்களை எடுத்தார். இந்த அருமையான சதம் மூலம் தற்போது 22 ஒரு புள்ளிகளை பெற்று 928 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Smith

ஸ்மித்தின் முதல் இடத்தை கோலிக்கு இன்றும் மூன்று புள்ளிகளே தேவை. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வருவதால் இந்த தொடரில் ஸ்மித் சற்று சொதப்பினாலும் அவரின் முதல் இடம் கோலிக்கு கிடைக்கும். மாறாக அவர் சிறப்பாக விளையாடினால் மேலும் கூடுதலாக சில புள்ளிகளை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -