சொன்னதை கேட்காமல் கோலியை வெறுப்பேற்றிய கேரள ரசிகர்கள் – கோலி அதிர்ப்தி

Kohli-1

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு காரணம் மோசமான பீல்டிங் என்று ரசிகர்கள் கூற கோலியும் அதனை நேற்றைய பேட்டியில் ஒப்புக்கொண்டார். போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கோலி இந்திய அணி ஒரே ஓவரில் இரண்டு கேட்சிகளை விட்டதும், வீரர்களின் மோசமான பீல்டிங்குமே இந்த மேட்ச் கோட்டை விட்டதற்கான காரணம் என்று கோலி பேசியிருந்தார்.

இந்த போட்டியில் கோலி மைதானத்தில் ரசிகர்களின் செயலால் டென்ஷனானதையும் காண முடிந்தது. அதன்படி புவனேஸ்வர் குமார் வீசிய 5-வது ஓவரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும்போது கேட்ச்சை கோட்டைவிட்டார். அப்போது மைதானத்திலிருந்து ரசிகர்கள் தோனி தோனி என்று கத்திக் கொண்டே இருந்தனர்.

இதனை எல்லைக் கோட்டில் இருந்து கவனித்த கோலி டென்ஷனாகி ரசிகரிடம் கை காட்டி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏனெனில் முதல் போட்டியில் பங்கேற்கும் முன் மைதானத்தில் யாரும் தோனி தோனி என்று கத்த கூடாது. அது பண்ட்க்கு கொடுக்கும் அவமரியாதை எனவே அவரை உற்சாகப்படுத்தும் மாறும் தோனியின் பெயரை கூற வேண்டாம் என்றும் கோலி கூறியிருந்தார்.

Kohli

ஆனால் இந்தப் போட்டியிலும் மீண்டும் தோனி தோனி என்று ரசிகர்கள் கத்த அதனை விரும்பாத கோலி தனது அதிர்ப்தியை ரசிகர்கள் முன் கோலி வெளிப்படுத்தினார். கோலியின் இந்த செயல் தற்போது இணையத்தில் முக்கிய செய்தியாக வலம் வருகிறது.

- Advertisement -