7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோலி. காரணம் என்ன தெரியுமா ?- சூப்பர் நியூஸ்

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் நேற்று விராட் கோலி ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறும் போது 7 வயது சிறுவனிடம் அவர் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஹோட்டல் அறையில் தனது மனைவி அனுஷ்காவுடன் வெளியே வந்த கோலி அங்கிருந்த இந்திய ரசிகர்களை பார்த்தபடி சென்றார். அப்போது அங்கிருந்த 7 வயது சிறுவன் விராட்கோலி நோக்கி என்னுடைய ஆட்டோகிராஃப் உங்களுக்கு வேண்டுமா என்று சத்தமாக கேட்டான். வழக்கமாக ரசிகர்கள் தான் கோலியிடம் ஆட்டோகிராப் கேப்பார்கள். ஆனால் அந்த சிறுவன் நான் உங்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுக்கட்டுமா என்று வித்தியாசமாக கேட்பதை கவனித்த கோலி மற்றும் அனுஷ்கா அங்கேயே நின்று சிறுவனை நோக்கி சென்றனர்.

பின்னர் அவனிடம் உன்னுடைய ஆட்டோகிராஃப் எனக்கு வேண்டும் உன்னுடைய ஆட்டோகிராஃப் தருகிறாயா என்று ஒரு பேப்பரை நீட்டினார் கோலி. பிறகு அந்த சிறுவன் அதில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்தார். பிறகு கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோர் அங்கிருந்து விடைபெற்று சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement