வீடியோ : ஆட்டமிழந்து வெளியேறிய பின்னர் ஓய்வறையில் கோபத்தை வெளிப்படுத்திய – விராட் கோலி

Out
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களை மட்டுமே குவித்தது.

Robinson

- Advertisement -

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவு வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

இந்த இரண்டாவது இன்னிங்சில் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி நிச்சயம் அரைசதத்தை கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தான் ஆட்டமிழந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத விராட்கோலி ஆட்டமிழந்து வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்ற உடன் தான் ஆட்டமிழந்த விதம் குறித்து விரக்தியடைந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த செயல் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்த விராட் கோலி இந்த இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியது அவருக்கு சற்று வருத்தத்தை அளித்திருக்கலாம்.

Advertisement