கோலியின் தீவிர ரசிகர் செய்த செயல். இப்படி கூடவா வெறித்தனமா இருப்பாங்க – வைரலாகும் புகைப்படம்

Kohli-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டுமே மிக சொதப்பலாக இருந்தது.

மேலும் பேட்டிங்கில் கோலி நான்காம் இடத்தில் இறங்கி விரைவில் ஆட்டமிழந்தது மிக பரபரப்பாக பேசப்பட்ட விடயமாக மாறியது. இந்நிலையில் அந்த போட்டியில் கோலியின் ரசிகர் ஒருவர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கோலியின் தீவிர ரசிகரான அவர் கோலியின் உருவத்தை தனது பின்தலையில் வரைந்துள்ளார்.

இந்த ஹேர்கட்டுக்கு 6 முதல் 8 மணி நேரம் ஆனதாகவும், கோலியை நேரில் காண்பதற்காகவே மைதானத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோலியை நான் நேரில் பார்த்து அவரை கட்டி அணைக்க வேண்டும் அதுவே என்னோட ஆசை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.