2 வருடமாக கோலியை தொடரும் ஒரு சோகக்கதை. இன்றும் இப்படியா ?- விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Ind

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்ங்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் நார்ட்ஜ் பந்து வீச்சில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12 நாட்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். கோலியின் இந்த விக்கெட் நார்ட்ஜ் உடைய முதல் விக்கெட்டாக அமைந்தது. மேலும் அவர் அவுட் ஆனபோது தான் அவுட் தானா என்பதை உறுதி செய்ய டிஆர்எஸ் முறையை அப்பீல் செய்தார் கோலி.

kohli 5

பின்னர் மூன்றாவது அவரின் உதவியால் இறுதியில் கோலி அவுட் என்று அறிவிக்கப்பட அதிர்ச்சியில் வெளியேறினார் கோலி. இதன்மூலம் டிஆர்எஸ் முறையை தொடர்ச்சியாக 9 ஆவது முறை கோலி தவறாக பயன்படுத்தியுள்ளார். கடைசியாக இரண்டு ஆண்டுக்கு முன்பாக டிஆர்எஸ் முறை அவருக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement