2008 ஆம் ஆண்டிற்கு பிறகு மோசமான வருடத்தை சந்தித்த விராட் கோலி. இப்படி ஒரு சோதனையா ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வடிவமான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருபவர். தொடர்ந்து இவர் களத்தில் அடிக்கும் செஞ்சுரி ரசிகர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அந்த வகையில் தான் எப்போது பேட்டிங் செய்ய களம் இறங்கினாலும் ரன் வேட்டை நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கோலிக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது.

Kohli

- Advertisement -

2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான கோலி இதுவரை 87 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 251 ஒருநாள் போட்டிகள், 85 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அனைத்து விதமான விதமான கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 22 ஆயிரம் ரன்களை அவர் குவித்துள்ளார். இதில் 70 சதங்கள் அடங்கும். மேலும் இவரின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால் உலகெங்கும் நிறைய ரசிகர்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் கோலி எந்த ஒரு பார்மேட்டிலும் சதத்தை பதிவு செய்யாமல் நிறைவு செய்துள்ளார். 2008ஆம் ஆண்டு அவர் அறிமுகமானபோது ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்ததால் அவரால் சதத்தை அடிக்க முடியவில்லை. அதன் பின்னர் 2009 இல் ஆரம்பித்து 2019 வரை சர்வதேச கிரிக்கெட்டை ஆட்சி செய்த கோலி 70 சதங்களை அடித்து நொறுக்கியுள்ளார். கடந்த 11 வருடத்தில் அவர் சதம் அடிக்காமல் இருந்ததில்லை.

kohli

இந்நிலையில் அவரின் இந்த அற்புதமான சாதனையை இந்தாண்டு செய்ய தவறி உள்ளார். மொத்தமாக இந்த ஆண்டு 21 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி பலமுறை அரைசதம் கடந்து இருந்தாலும் சதத்தை தவறவிட்டார். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெற்றாலும் இந்த போட்டியை அவர் மிஸ் செய்ய உள்ளார்.

Kohli

ஏனெனில் அவருக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கோலி நாடு திரும்பி உள்ளார். இதனால் இந்த வருடத்தை கோலி சதத்தை நிறைவு செய்யாமலேயே முடித்துளார். எனவே இந்தாண்டு விராட் கோலிக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement