நான் முதல் போட்டியின்போது மைதானத்தில் நடனமாடியதற்கு இதுவே காரணம் – மனம் திறந்த கோலி

Chahal

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 42வது அடித்து அசத்தினார். இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு அவர் ஒரு பேட்டி ஒன்றினை அளித்தார்.

Kohli

அந்த பேட்டியில் கோலியிடம் முதல் போட்டியின்போது நீங்கள் மழைக்கு நடுவே நடனமாடி கொண்டிருந்தீர்கள் அதன் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி கூறியதாவது : எனக்கு பொதுவாக எந்த இசையைக் கேட்டாலும் நடனமாடும் வேண்டும் என்று என் மனது சொல்லும்.

அதுவும் இங்கு கரீபியன் இசை மிகவும் சிறப்பாக இருக்கும் மேலும் நடனமாட தூண்டும் வகையிலும் அது இருப்பதால் நான் மைதானத்தில் ரசித்து நடனம் ஆடினேன். மேலும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகப்பெரிய விடயம். அது எனக்கு கிடைத்திருக்கிறது அதனால் நான் கிரிக்கெட் விளையாடும் போது நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் ரசித்து ரசித்து செய்கிறேன்.

Kohli

அதனைப் போன்றே இந்த நடனமும் எனக்கு தோன்றியதால் நான் மைதானத்தில் செய்தேன் என்று கோலி பதிலளித்தார் மேலும் இரண்டாவது போட்டியில் சதம் படிப்பதற்கு முன்பாக 65 ரன்களில் எனக்கு டயர்ட் ஆகிவிட்டது இருந்தாலும் அணிக்கு தேவை என்பதால் தொடர்ந்து விளையாடி 120 ரன்கள் குவித்தேன் என்று கோலி கூறினார்.

- Advertisement -