கெட்ட வார்த்தையில் ஆன்டர்சனை திட்டிய விராட் கோலி – களத்தில் அப்படி என்ன நடந்தது ?

Anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியானது தற்போது நான்காவது நாளில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரு அணிகளுமே முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி உள்ள காரணத்தினால் தற்போது நான்காவது நாளிலும் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த அதிக எதிர்பார்ப்புடன் போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

red cap 2

- Advertisement -

இந்நிலையில் இன்றைய நான்காவது போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆண்டர்சனை கடுமையான வார்த்தைகளில் திட்டிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரரான சிராஜை வேண்டுமென்றே ஆண்டர்சன் சீண்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இன்றைய போட்டியிலும் கோலியை அதே போன்று சீண்டிப் பார்த்தார். ஆனால் விராத் கோலியோ தனக்கே உரித்தான பாணியில் அவருக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார். இன்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது துவக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து நிலையில் விளையாட வந்த விராட் கோலி 17-வது ஓவரில் போது புஜாரா அடித்த பந்தில் ஒரு ரன் ஓடலாம் என்று நினைத்தார்.

anderson 1

ஆனால் பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த கோலி “இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன்”, “உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது” என கெட்ட வார்த்தையுடன் அவரை திட்டினார். கோலி இவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி தற்போது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது.

நான்காம் நாளில் இந்திய அணி தற்போது 2-வது இன்னிங்சை விளையாடிய வர 5 வது நாள் போட்டி இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement