என்னது கோலி 2 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட தடையா ? – ஐ.சி.சி சொல்லும் விதிமுறை என்ன தெரியுமா ?

Kohli-4
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் 8 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி தடைசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் 4 ஆவது மற்றும் 5 ஆவது போட்டியில் இந்திய அணி பந்துவீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது.

- Advertisement -

இதனால் நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர்களுக்கான போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதமும், ஐந்தாவது டி20 போட்டிக்கான ஊதியத்திலிருந்து 20 சதவீதத்தையும் ஐசிசி அபராதமாக விதித்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி பந்து வீச அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது.

அதன்படி ஒரு ஓவர் பந்து வீச நேரம் அதிகரித்தால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 ஓவர்கள் தாமதமாக வீசியதால் 80 சதவீத ஊதியம் அவர்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாட தடை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Ind

ஆனால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்பு இதே போன்று நடந்திருந்தால் இரண்டு முறை மெதுவாக பந்து வீசி இருந்தால் அவர் தடை செய்யப்பட் இருப்பார். ஆனால் 5வது டி20 போட்டியில் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட கோலி தற்போது பழைய விதிமுறையின் காரணமாக இரண்டாவது போட்டியில் எந்த தடையும் இன்றி முக்கியமான டூ அண்ட் டை மேட்சில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement