தோனி 60 போட்டிகளில் செய்ததை 47 போட்டிகளில் முடித்த கோலி. தோனி மட்டும் அல்ல கோலியும் கிங் தான் – விவரம் இதோ

dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது ஆன்டிகுவாவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இது வரை இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையை தோனி தன்வசம் வைத்திருந்தார்.

மொத்தம் 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய தோனி அதில் 27 போட்டிகளை வென்று வென்றுள்ளார். தோனியின் ஓய்வுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பதவி ஏற்ற கோலி இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார்.

இந்த 47 போட்டிகளில் 27 வெற்றிகளும், 10 தோல்வி மற்றும் 10 டிரா செய்துள்ளார். இந்த 27 வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை 47 போட்டியிலேயே கோலி சமன் செய்துள்ளார். மேலும் விரைவில் அவர் சர்வதேச அளவில் அதிக வெற்றிகளைப் பெற்ற டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையும் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement