அசாருதீன் சாதனை சமன்செய்து தோனியின் சாதனைக்கு ஆப்பு வைக்கவுள்ள கோலி – சாதனை விவரம் இதோ

Azharuddin
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Umesh

இந்திய அணியின் கேப்டனாக கோலி கடந்த போட்டியோடு சேர்த்து 50 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். இந்த போட்டியில் வென்ற இந்திய அணி தற்போது கோலியின் தலைமையின் கீழ் முப்பதாவது வெற்றியைப் பெற்றுள்ளது சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மேலும் தற்போது கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற எட்டாவது இன்னிங்ஸ் வெற்றி இதுவாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டனாக அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியலில் தோனி 9 இன்னிங்ஸ் வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று தந்து முதலிடத்தில் உள்ளார்.

Ind

அதற்கடுத்த இடத்தில் அசாருதீன் 8 இன்னிங்ஸ் வெற்றிகள் அந்த சாதனையை தற்போது கோலி சமன் செய்துள்ளார். மேலும் தோனியின் சாதனையை அவர் விரைவில் முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement