இமாலய சிக்ஸ் அடித்து வில்லியம்ஸை கெத்தாக ஒரு லுக் விட்ட கோலி

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் வில்லியம்ஸ்க்கும் இடையே ஒரு மோதல் இருந்தது. இவர்கள் இருவரின் மோதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே கூறலாம். எப்பொழுது கோலி பேட்டிங் செய்ய வந்தாலும் வில்லியம்சன் பவுலிங் செய்ய வந்தாலும் அவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை படம் பிடிக்கவே கேமராக்கள் அலை மோதின.

- Advertisement -

முதல் போட்டியின்போது விராட் கோலி சிக்ஸர் அடித்து வில்லியம்ஸ்க்கு எதிராக நோட்புக் செலிப்ரேஷன் செய்தார். அந்த செலிப்ரேஷன் இணையத்தில் ஹிட்டடித்தது அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் கோலியின் விக்கெட் வீழ்த்திய வில்லியம்ஸ் வாய் மீது கை வைத்து அவரது விக்கெட்டை கொண்டாடிய வீடியோவும் இணையத்தில் ஹிட் அடித்தது. இந்நிலையில் நேற்று தொடரின் இறுதிப்போட்டியில் வில்லியம்ஸை எதிர்கொண்ட போதெல்லாம் கோலியின் மீது கேமராக்கள் இருந்தன.

அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்த்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அதேபோன்று அவர் ஓவரை பிரித்தெடுத்த கோலி லெக் சைடில் ஒரு இமாலய சிக்சர் ஒன்றை விளாசினார். அந்த சிக்ஸரை அடித்துவிட்டு கோலி வில்லியம்சை நோக்கி வாயை திறந்தவாறு ஆ.ஆ என்று பார்த்தார். மூடியிருந்த அவரது வாயை திறப்பதற்காக என்பதுபோல இருந்தது. கோலியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement