அஷ்வின் பந்துவீசும் போது தமிழில் உற்சாகப்படுத்திய கேப்டன் கோலி – வைரலாகும் வீடியோ

Ashwin

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இத்தொடரை இந்திய அணி 1 க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

Ashwin

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீசும்போது தமிழில் உற்சாகப்படுத்திய வேறு வீடியோவினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம் கிரிக்கெட் போட்டிகளில் அவ்வப்போது வீரர்கள் தமிழில் பேசிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வரும் வேளையில் கோலி தமிழில் பேசிய இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விகாரி ஆகியோர் தமிழில் பேசிக் கொண்டே வீடியோவும், அகர்வால் தமிழ் பேசும் ஒரு சில வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தன.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் பந்து வீசி கொண்டிருக்கையில் கவர் திசையில் நின்று கொண்டிருந்த விராட்கோலி அஷ்வினை நோக்கி “வேற லெவல் வேற லெவல்” அஷ் என்று தமிழில் கத்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அவ்வப்போது வரவேற்பை பெற்று வரும் இந்திய அணி வீரர்கள் அடிக்கடி தமிழில் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது கோலியையும் அஸ்வின் தமிழை பேச வைத்துள்ளார் என்று ரசிகர்கள் இந்த வீடியோவினை பகிர்ந்து இணையத்தில் ட்ரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.