நம்ப முடியாத கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறிய கோலி

kohli 5
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய தனது இரண்டாவது நாள் போட்டியை விளையாடயது.

- Advertisement -

இரண்டாம் நாளான இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் வீரர் ரஹானே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 27 ஆவது சதத்தை அடித்தார். மேலும் கேப்டனாக தனது 188 இன்னிங்சில் விளையாடும் கோலி 41 ஆவது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.

அதன்பின்னர் 136 ரன்கள் எடுத்திருந்தபோது இபாதத் ஹொசைன் பந்துவீச்சில் டஜூல் இடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். கோலி கொடுத்த கடினமான கேட்சை சூப்பராக பிடித்த வங்கதேச வீரர் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார். கோலி அதனை நம்பமுடியாமல் வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களில் டிக்ளேர் செய்தது. தற்போது வங்கதேச அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Advertisement