ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்த கோலி உடனடியாக முடிவை மாற்ற காரணம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 21ம் தேதி மும்பையில் அறிவிக்கப்பட்டது.

Kohli

- Advertisement -

இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் மீண்டும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை தொடர் முடிந்து ஓய்வு எடுக்க நினைத்த கோலி மீண்டும் அணிக்கு உடனடியாக திரும்பி இதற்கான காரணம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

அதன்படி உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. அதன்பின் இந்திய அணி மீதும் மற்றும் கேப்டன் கோலி மனம் கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்டது. மேலும் நெருக்கடிக்கு ஆளான கேப்டன் கோலி இந்த தொடரில் ஓய்வு எடுத்தால் அவருக்கு பதிலாக ரோகித் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பதனை உணர்ந்தார்.

Kohli

ஏற்கனவே இந்திய அணியில் கேப்டன் மாற்றம் பற்றிய பேச்சு உலக கோப்பை தோல்விக்கு பின் அடிப்பட்டதால் இந்நிலையில் ஓய்வு எடுத்தால் கண்டிப்பாக ரோகித் கேப்டனாக ஆக்கிவிடுவார்கள் என்று எண்ணிய கோலி எனக்கு தற்போதைய ஓய்வு தேவை இல்லை. அணியை சீர்படுத்தும் நெறிப்படுத்தும் மீண்டும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக கூறி தனது கேப்டன்ஷிப்பை தற்போது காப்பாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement