4 ஆவது டெஸ்டில் அவரை தூக்க போரேன். கோலியின் முடிவால் அதிர்ச்சியில் சீனியர் வீரர் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்ற காரணத்தினால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

- Advertisement -

ஏற்கனவே இரண்டாவது போட்டியின் முடிவில் இந்திய அணி பலமாக இருந்தவேளையில் மூன்றாவது போட்டியில் மோசமான தோல்வியைத் தழுவியதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. அந்தவகையில் தற்போது இந்திய அணியில் 4வது டெஸ்ட் போட்டியில் செய்யவேண்டிய சில மாற்றங்கள் குறித்து கேப்டன் விராட் கோலி சீனியர் வீரர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன்படி 4வது டெஸ்ட் போட்டியில் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு கடைசி மூன்று நாட்களில் சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கால் மூட்டில் அடிபட்ட காரணத்தினால் ஜடேஜா சிகிச்சை எடுத்து வருவதால் அவர் ஒருவேளை இறங்கவில்லை என்றால் அஸ்வின் விளையாடுவார்.

Jadeja-1

அதேசமயம் ஜடேஜா விளையாடினாலும் இஷாந்த் ஷர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அஷ்வின் விளையாடுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஷாந்த் ஷர்மா தற்போது அதிர்ப்தியில் இருப்பதாக தெரிகிறது. சீனியர் வீரர்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக அஷ்வினை இணைக்க வேண்டும் என்பது கோலி கூறியிருக்கிறார். இஷாந்த் ஷர்மா இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீச கூடியவர் என்றாலும் இந்த தொடரில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார்.

ishanth 1

அதேவேளையில் கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி அஷ்வின் நிச்சயம் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் முக்கிய வீரராக இருப்பார் என்பதனாலேயே கோலி இந்த ஆலோசனையை தெரிவித்திருக்கிறார். இருப்பினும் கோலி அணியில் மாற்றம் செய்வாரா என்பது போட்டி நாளன்றுதான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement