ரசிகர்கள் வேண்டாம் என்று சொன்ன வீரரை மீண்டும் வம்படியாக களமிறக்கும் கோலி : யார் அந்த வீரர் ? – விவரம் இதோ

Gill
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட 20 வயது இளம் வீரர் பிரித்திவ் ஷா ரசிகர்களை ஏமாற்றினார். முதல் 2 ஆட்டத்திலும் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தனது தேர்வை கேள்விக்குள்ளாக்கினார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுபமன் கில் இறங்குவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

ஆனால கேப்டன் விராட் கோலி ரசிகர்களின் மனதில் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : இல்லை கண்டிப்பாக, இல்லை . பிரித்திவ் ஷா ஆட ஆரம்பித்தால் சரவெடியாக வெடிப்பார் . ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டால் போதும்.

மனதளவில் அவர் தெளிவாக இருந்தால் எந்த பந்து வீச்சையும் துவம்சம் செய்யும் திறமை படைத்தவர் அவர். நம்மால் முடியும் என்று நினைக்க வேண்டும். அவர் ஆட ஆரம்பித்து விட்டால் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் அடிப்பார். கண்டிப்பாக இரண்டாவது போட்டியிலும் அவர்தான் களமிறங்குவார் என்று ரசிகர்களின் மனதில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார் கேப்டன் விராட் கோலி.

Gill 2

நியூசிலாந்து மண்ணில் இந்திய ஏ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருக்கும் கில் மீண்டும் தனது வாய்ப்புக்காக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல தொடர்களாக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement