டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் கங்குலியை ஓரங்கட்டிய கிங் கோலி. இமாலய சாதனை – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Ind-1

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 89 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக இஷாந்த் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி தற்போது வரை 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.

இன்னும் இந்திய அணி 69 ரன்கள் பின் நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வி தற்போது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம். பிரித்வி ஷா 14 ரன்களிலும், மயங்க் அகர்வால் 58 ரன்களிலும் மற்றும் புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அடுத்ததாக கேப்டன் விராட்கோலி சற்று பொறுமையாக விளையாடி 43 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்து வெளியேறினார்.

Kohli-2

இந்நிலையில் கோலி அடித்த இந்த 19 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு சாதனையை விராட் கோலி கடந்துள்ளார். அதன்படி 113 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ள கங்குலி 7212 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்துள்ளார்.

Kohli-2

அதனை விராட் கோலி 28 டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாகவே 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7223 ரன்கள் குவித்து தற்போது கங்குலியை அவர் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 9 ரன்கள் அடித்தபோது கோலி இந்த சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement