கங்குலியை தாண்டி சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்து கோலி சாதனை – விவரம் இதோ

Kohli

வெஸ்ட் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த சதம் (120)மூலம் பல சாதனைகளை தன்வசம் சேர்த்துள்ளார். முதலில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

kohli 1

இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஜாவித் மியான்டட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1930 ரன்கள் எடுத்திருந்தார். அதனை தற்போது கோலி முறியடித்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கோலி அடித்த 42 சதம் சதமாக இது பதிவாகி உள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 34 போட்டிகளில் 2000 ரன்களை அவர் கடந்துள்ளார்.

ஒரு அணிக்கு எதிராக 2000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை முன்பு ரோகித் 37 போட்டிகளில் 2000 ரன்கள் அடித்து சாதனையை வைத்து இருந்தார். அந்த சாதனையை தற்போது கோலி 34 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் முறியடித்துள்ளார். மேலும் கேப்டனாக ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

kohli 1

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 6 சதங்களை கேப்டனாக அவர் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை விட முக்கியமான ஒரு வரலாற்றுச் சாதனையாக கோலி இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் கங்குலியை(11363) தாண்டி அவர் இரண்டாம் இடம் பிடித்தார். இதுவரை 138 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி 11406 ரன்களை அடித்துள்ளார்.