இன்றைய போட்டியில் 19 ரன்கள் அடிப்பதன் மூலம் கோலி படைக்கவுள்ள உலகசாதனை – என்ன தெரியுமா ?

Kohli
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி புதிய உலக சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். இந்த சாதனை யாதெனில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 1912 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 19 ரன் எடுக்கும் பட்சத்தில் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைப்பார்.

இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பாகிஸ்தானின் ஜாவித் மியான்தத் 1930 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 19 ரன்கள் அடித்தால் கோலி இந்த சாதனையை தகர்க்க இருக்கிறார்.

Kohli

அதேபோல வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அதிக சதம் அடித்தவர் பட்டியலில் தற்போது இரண்டு சதங்கள் அடித்து சமனில் இருக்கும் கோலி இந்த தொடரில் ஒரு சதம் அடித்தால் அந்த சாதனையும் தனதாக்கி கொள்வார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு நடைபெறவிருக்கும் இந்த போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement