5 ஆண்டுகளுக்கு பிறகு கோலி படைத்த மட்டமான சாதனை. இவரா இப்படி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டியிலும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

Ind

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் தவான் இல்லாததால் இளம் வீரர்கள் தலைமையில் இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாற்றத்தை கண்டது. மேலும் இந்திய அணியின் முன்னணி வீரரான கோலியும் இந்த தொடரில் தனது பொறுப்பை உணராமல் வெகுவிரைவாக அவுட்டாகி வெளியேறினார். ஒவ்வொரு போட்டியிலும் ஐயர் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளிக்க மற்ற அனைவரும் தங்களது பங்களிப்பை அளிக்க தவறினர்.

இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய அணி பெரிய தோல்வியை சந்தித்தது. அதிலும் குறிப்பாக கோலி இந்த தொடரில் முறையே 51, 15, 9 என மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். மேலும் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு கோலி வைத்திருக்கும் மகா மட்டமான சராசரியாக இது பதிவாகியுள்ளது. இந்த தொடர் முழுவதும் 25 ரன்கள் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli 3

இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக 148 ரன்களும், 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 89 ரன்களும் எடுத்திருந்தார். அதன் பிறகு ஐந்து வருடங்களில் மிக மட்டமான ஆவரேஜாக இது பதிவாகி உள்ளது. மேலும் உலகின் நம்பர் ஒன் வீரர் அனைவருக்கும் இது போன்று நடப்பது அரிது என்றாலும் அது இந்திய அணியை பாதித்தது பெருமளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement