மீண்டும் பார்முக்கு வந்த முன்னணி வீரர். கோலிக்கு வந்த புதிய தலைவலி – விவரம் இதோ

Kohli

உலகக் கோப்பை தொடரின் போது காயமடைந்த ஷிகர் தவான் அணியில் இருந்து விலகினார். அதன் பின்னர் இந்திய அணிக்காக திரும்பும் வாய்ப்புக்காக காத்திருந்த போது சையத் முஷ்டாக் அலி கோப்பை போதும் கால் முட்டியில் அடிபட்டு இந்திய அணிக்கு திரும்புவதில் தாமதம் ஆனது. அதன் பின்னர் ஒருவழியாக எப்படியோ தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பிடித்தார்.

dhawan 1

தனக்கு கிடைத்திருக்கும் இந்த இரண்டு வாய்ப்பில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அவர் இரண்டாவது போட்டியில் சொதப்பினாலும், மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் அவர் அடித்து ஆடவேண்டும் என்று அவசரப்பட்டு தவறான ஷாட்டுகளை ஆடினாலும் பிறகு சுதாரித்து சிறப்பாக ஆடினார் என்று கூற வேண்டும்.

இந்த தொடரில் ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தவானும் ராகுலும் தொடக்க வீரராக விளையாடினார்கள். சமீபத்தில் பார்மின்றி தவித்து வந்த தவான் இந்த போட்டியின் மூலம் மீண்டும் தனது பார்ம்மை மீட்டு எடுத்துள்ளார். இரண்டாவது போட்டியில் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக ஆடிய தவான் மூன்றாவது போட்டியில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடித்து ஆடினார். கடந்த 15 இன்னிங்ஸ்களில் முதல் அரை சதத்தை தற்போதுதான் எட்டியுள்ளார்.

Dhawan

அதாவது 2019 ஆம் ஆண்டில் ஒரு டி20 போட்டியில் கூட அவர் அரை சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இருப்பினும் கோலிக்கு இவரது பார்ம் தற்போது ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா ராகுல் என இருவரும் தற்போது சிறப்பான துவக்கத்தை அளித்து வரும் நிலையில் தவானும் பார்முக்கு திரும்பியுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக யாரை துவக்கஜோடியாக களமிறக்குவது என்ற குழப்பத்தில் கோலி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -