2 ஆவது போட்டியில் இவர் விளையாடமாட்டார். உறுதி செய்த கேப்டன் கோலி – அப்போ யார் ஆடுவாங்க ?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது கடைசி நாளில் மழை பெய்ததன் காரணமாக எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டியை இந்திய அணி டிரா செய்தது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் முதலாவது போட்டியில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸ்களில் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்திய ஷர்துல் தாகூர் இடம்பெறாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் ? என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.

thakur 2

இந்நிலையில் நாளைய இரண்டாவது போட்டியில் ஷர்துல் தாகூர் விளையாட மாட்டார் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விராட் கோலி இடம்பெற மாட்டார் என்று கோலி தெரிவித்திருந்தாலும் அவருக்கு பதிலாக யார் விளையாடுவார்கள் ? என்று கூறவில்லை. இதன் காரணமாக நாளைய இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர்க்கு பதிலாக களமிறங்குவது போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Thakur 1

ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாதது குறித்து அதிகளவு விமர்சனம் எழுந்த நிலையில் அதன் காரணமாக அஷ்வின் களமிறங்குவார் என்று தெரிகிறது. இருப்பினும் நாளைய போட்டியில் டாசிற்கு பிறகுதான் இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement