2 ஆவது டெஸ்ட் : ஷர்துல் தாகூருக்கு பதிலாக விளையாடுவது இவர்தான் – டாஸிற்கு பிறகு கோலி அறிவிப்பு

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்துள்ளது.

indvseng

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த டாஸ் முடிந்து இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய கேப்டன் விராத் கோலி கூறுகையில் : அணியில் ஒரே ஒரு மாற்றம் தான் செய்யப்படுகிறது என்றும் ஷர்துல் தாகூருக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா விளையாடுகிறார் என்று அறிவித்தார்.

- Advertisement -

இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை தமிழக வீரர் அஸ்வினுக்கு ஏமாற்றும் கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

ishanth 1

1) ரோஹித் சர்மா, 2) கே.எல்.ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஜடேஜா, 8) பும்ரா, 9) முகமது ஷமி, 10) இஷாந்த் சர்மா, 11) முகமது சிராஜ்

Advertisement