இவர்கள் இருவர் தான் நாளைய போட்டியில் ஓப்பனிங்கில் விளையாடுவார்கள் – கோலி திட்டவட்டம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை 21 ஆம் தேதி வெல்லிங்டன் மைதானத்தில் தொடங்குகிறது. வழக்கமான தொடக்க வீரரான ரோகித் சர்மா இல்லாததால் அவருக்கு பதிலாக புதிதாக பிரித்திவ் ஷா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsNZ

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது :இஷாந்த் ஷர்மா வழக்கம்போல் நன்றாக பந்து வீசுகிறார். கணுக்கால் காயத்திற்கு முன்னர் எவ்வாறு சரியாக வீசினாரோ அவ்வாறு வீசிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னதாக இரண்டு முறை நியூசிலாந்து நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்கிறார் இஷாந்த் சர்மா. அவரது அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும். பிரித்திவி ஷா திறமையான ஆட்டக்காரர் அவரது ஆட்டத் முறையில் அவர் நன்றாக ஆடிக் கொண்டிருக்கிறார்.

Shaw

இதனையே நாங்களும் விரும்புகிறோம். இந்த இருவருக்கும் கண்டிப்பாக நாளைய போட்டியில் இடம் உண்டு என்று தெரிவித்தார் விராட் கோலி. மேலும் பயிற்சி ஆட்டத்திலும் இவர்கள் இருவரே துவக்க வீரர்களாக களமிறங்கியதால் நாளைய போட்டியிலும் இவர்களே துவக்க வீரர்களா களமிறங்குவார்கள் என்று திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.

Advertisement