- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது டெஸ்டிலும் அஷ்வினுக்கு வாய்ப்பில்லை – கோலி சொன்ன இந்த விஷயத்தை கவனிச்சீங்களா ?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஏற்பட்ட மழை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. 5வது நாளில் வெற்றிபெற 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 9 விக்கெட்டுகளை வைத்திருந்த இந்திய அணியானது எளிதாக இந்த போட்டியை கைப்பற்றி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழையால் போட்டி நடைபெறாதது குறித்து கேப்டன் விராத் கோலி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதேவேளையில் இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து போட்டியின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ப்தியை தெரிவித்திருந்தனர். மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினின் நீக்கம் குறித்து விமர்சனத்தையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக முதல் போட்டியில் பங்கேற்ற ஜடேஜா பவுலிங்கில் 3 ஓவர் மட்டுமே வீசினாலும் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து தனது தேர்வை நியாயப்படுத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக இனிவரும் போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. இந்நிலையில் கடந்த போட்டி முடிந்து பேசிய விராத் கோலி கூறுகையில் அஸ்வின் இனிவரும் போட்டிகளில் விளையாடுவது கஷ்டம்தான் என்பதை மறைமுகமாக தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே இதே போன்ற அணிதான் விளையாடும் மேலும் அணியின் பலம் அறிந்து நாங்கள் இந்த விடயத்தை மாற்றியுள்ளோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது இங்கிலாந்து சூழ்நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் தான் இனி வரும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறோம் என்று விராட் கோலி குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

அந்த வகையில் சுழற்பந்துவீச்சாளர் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் அஸ்வினை விட ஜடேஜாவிற்கு முக்கியத்துவம் அளித்து அவரை அணியில் நீடிக்க வைப்பார் என்றும் தெரிகிறது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by