தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட கிங் கோலி. ஏன் இப்படி பண்ணாரு – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை மைதானத்தில் துவங்கியது.

dhawan

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் 74 ரன்களை குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் விராட் கோலி செய்த ஒரு தவறினாலே இந்திய அணி தற்போது தோல்வியின் வழியில் சென்று கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் விராட் கோலியின் வழக்கமான இடமான மூன்றாவது இடத்தில் அவர் இறங்கி இருந்தால் அணியை நல்ல நிலைமைக்குக் கொண்டு சென்றிருப்பார் என்றும் ரசிகர்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

அதனை விடுத்தது மூன்றாவது இடத்தில் ராகுலை தேவையில்லாமல் இறக்கி பரிசோதித்ததன் மூலம் பின் வரிசையில் யாரும் சரிவர நிலைத்து நின்று ஆடாமல் இந்திய அணியால் பெரிய ரன்களை குவிக்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை வலைதளத்தில் பதிவு செய்து குறிப்பிடத்தக்கது.

- Advertisement -