ஒரே நேரத்தில் சச்சின் மற்றும் பாண்டிங் சாதனையை தகர்க்கவுள்ள விராட் கோலி – நாளைய போட்டியில் நடக்குமா ?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை புனே மைதானத்தில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சச்சின் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. எப்பொழுதும் சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மெஷினாகவும் புது புது ரெக்கார்டுகளை படைக்கும் வீரராக இருக்கும் இந்திய அணி கேப்டன் கோலி நாளைய போட்டியில் சதம் விளாசுவதன்மூலம் இரண்டு சாதனைகளை நிகழ்த்த உள்ளார்.

Sachin

- Advertisement -

அதில் ஒன்று இதுவரை இந்திய மண்ணில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்களை விளாசியுள்ளார். இந்த எண்ணிக்கையை அடைய கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை. இதுவரை இந்திய மண்ணில் 19 சதங்களை விளாசியுள்ளார். நாளைய போட்டியில் சதம் விளாசுவதன்மூலம் இந்திய மண்ணில் 20 சதத்தை விளாசியவர் என்ற சாதனையை சச்சினுடன் பகிர்ந்துகொள்வார்.

மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கேப்டனாக 41 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை அவர் கேப்டனாக விளாசியுள்ளார். கோலியும் தற்போது கேப்டனாக 22 சதங்கள் விளாசி உள்ளதால் நாளைய ஒருநாள் போட்டியில் சதம் அடிப்பதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

Kohli

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் சிறப்பான பார்மில் இருக்கும் கோலி இந்த தொடரில் சதம் அடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியை தொடர்ந்து அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை.

Kohli

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் சதத்தை அடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்காரணமாக விராட் கோலி இந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நிச்சயம் சதமடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

Advertisement