கோலி அவரே செஞ்சி இருந்தா கூட இவ்வளவு பண்ணியிருக்க மாட்டாரு. ஆனா இஷாந்துக்காக வேற லெவல் பண்ணிட்டாரு – விவரம் இதோ

Ishanth
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது போட்டியின் முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாடி தனதுமுதல் அரை சதத்தை அடித்தார். 57 ரன்கள் குவித்து வெளியேறிய ஷர்மாவை கோலி சிறப்பாக வரவேற்றார் மேலும் அவர் அரைசதம் கடந்த போது கோலி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் சதமடித்தால் கூட இவ்வளவு கொண்டாடி இருக்க மாட்டீர்கள். ஆனால் இஷாந்துக்காக நீங்கள் படும் இந்த ஆனந்தம் எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்கள் குவித்தது. ரஹானே அதிகபட்சமாக 74 ரன்களை குவித்தார்.

அதன்பின்னர் 468 குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement