வில்லியம்ஸை விமர்சையாக பழிதீர்த்து கோலி கொண்டாட்டம்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் இந்த போட்டியின்போது விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் வீரர் வில்லியம்ஸ் வீசிய பந்தை சிக்சருக்கு அடித்து அதனை விமர்சையாக கொண்டாடியது ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

சிக்ஸ் அடித்த பின்னர் பேண்ட் பாக்கெட்டில் போனை எடுத்து நோட்புக்கில் குறிப்பது போன்ற சைகை செய்தார் கோழியின் இந்த சைகை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கு காரணம் ஏனெனில் 2017 ஆம் ஆண்டு இதே போன்று கோலி விக்கெட்டை வீழ்த்திய போது வில்லியம்சன் நோட்புக் ஸ்டைலில் வழியனுப்பி வைக்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டால் அதற்கு கோலி ரிவென்ஞ் கொடுக்க அதேபோன்று செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement