டெஸ்ட் கிரிக்கெட்டில் தல தோனியின் சாதனையை காலி செய்த் கிங் கோலி – விவரம் இதோ

Dhoni

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் சென்னையில் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகித்தன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் கடந்த 24ஆம் தேதி துவங்கியது.

IND

இந்த போட்டி யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு நாட்களுக்குள் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வீழ்த்தி 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தால் கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். அதே வேளையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு சற்று பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் கேப்டன்சி வரிசையில் விராட்கோலி தோனியின் முக்கியமான சாதனை ஒன்றை தகர்த்துள்ளார்.

Dhoni

அந்த சாதனை யாரெனில் இந்திய அணிக்காக உள்ளூர் மைதானங்களில் அதாவது இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 30 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை ஏற்றுள்ள தோனி 21 வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார். ஆனால் தற்போது இந்திய மண்ணில் 29வது போட்டியை விளையாடி உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 22 வெற்றிகளை குவித்து அசத்தி உள்ளது.

- Advertisement -

IND

இதன் காரணமாக இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற வரிசையில் தோனியை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடத்திற்கு சென்றுள்ளார். பின்னர் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 21 வெற்றிகளையும், அசாருதீன் 14 வெற்றிகளையும் பெற்று அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். மேலும் இந்த டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்ததும் இந்த மைதானம் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றதா என்ற சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.