தோனியின் சாதனையை தகர்த்தெறிந்த கோலி. இனி டெஸ்டிலும் கோலிதான் டாப் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி இந்தூரில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுதொடரில் 1 – 0 கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ind 1

- Advertisement -

இந்திய அணியின் இந்த வெற்றி மூலம் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தோனியின் சாதனையை தகர்த்து ஒரு புதிய சாதனையை செய்துள்ளார். அதன்படி இதுவரை அணியின் கேப்டனாக தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை 9 முறை இன்னிங்ஸ் வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் வெற்றியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் கோலி தோனியின் சாதனையை கடந்தார். அதாவது கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்றுள்ள 10 ஆவது இன்னிங்க்ஸ் வெற்றியாக இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

Ind-1

மேலும் இந்திய அணிக்கு இது தொடர்ச்சியான மூன்றாவது இன்னிங்ஸ் வெற்றி ஆகும். இதற்கு முன்னர் புனே மற்றும் ராஞ்சி மைதானங்களை நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் தற்போது இந்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement