தோனியை கேப்டன்ஷிப்பில் காலி செய்து அசத்திய கோலி. பிரமாண்ட சாதனை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் சார்பாக விகாரி சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 168 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 468 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை கடக்க முடியாமல் 210 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் வெற்றி மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார்.

Bumrah-1

இவருக்கு முன்னதாக தோனி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 27 வெற்றிகளை பதிவு செய்து இருந்தார். ஆனால் அந்த சாதனையை தற்போது 48 போட்டிகளில் விளையாடி 28 வெற்றிகளை பெற்று கோலி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement