ரோஹித் மட்டுமின்றி 5 வீரர்களின் சாதனையை தவறவிட்ட கோலி – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் டாஸ் போடப்பட்டது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ind vs sl

அதன்படி இலங்கை அணி களமிறங்க தயாராகியது. ஆனால் அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழை மேலும் அதிகரித்த காரணத்தினால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லை என்று தெரியவரவே ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி. கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் மீதமுள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலைமை இப்போது இரு அணிகளுக்கும் வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறாமல் போனதில் இரண்டு முக்கியமான சாதனைகளை கோலி தவறவிட்டுள்ளார். அதன்படி நேற்றைய போட்டியில் கோலி 1 ரன் அடித்திருந்தால் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மாவிடம் இருந்து தட்டி பறித்திருப்பார். ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் முறையே 2633 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

Kohli-2

அதுமட்டுமின்றி கோலி டி20 போட்டியில் இன்னும் 24 ரன்களை எடுக்கும் பட்சத்தில் கேப்டனாக டி20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டி புதிய சாதனை ஒன்றையும் படைத்திருப்பார். இவருக்கு முன்பாக 5 பேர் கேப்டன்களாக டி20 போட்டிகளில் சதமடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement