இன்றைய போட்டியில் ரோஹித்தின் இமாலய சாதனையை தகர்க்க உள்ள கோலி – விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Rahul

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 25 ரன்களை அளிக்கும் பட்சத்தில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்துவார். அது யாதெனில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இந்திய வீரரான கோலி 975 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 25 ரன்கள் குவித்தும் பட்சத்தில் இந்தியாவில் ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய t20 வீரர் என்ற சாதனையை அவர் படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உள் நாட்டில் நடந்த சர்வதேச டி20 போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் ஆயிரம் ரன்களை கடக்கவில்லை எனவே இந்த சாதனையை எட்ட இருக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி படைப்பார். அதுமட்டுமின்றி ரோகித் சர்மாவும் கோலியும் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் மாறி மாறி முன்னிலையில் இருக்கின்றார்கள்.

rohith 1

தற்போது டி20 போட்டிகளில் 2547 ரன்களுடன் ரோகித் முதலிடத்தில் உள்ளார். ரோஹித்தை விட 3 ரன்களே பின்தங்கி கோலி 2544 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எனவே இன்றைய போட்டியில் மூன்று ரன்களை அவர் கடக்கும்பொழுது டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த சர்வதேச வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -