கவாஸ்கர், சேவாக்கிற்கு பிறகு மிகப்பெரிய கவுரவத்தை அடையும் கோலி – விவரம் இதோ

Kohli

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை முடித்து அடுத்த தொடருக் காக தயாராகி வருகிறது. அடுத்ததாக வங்கதேச அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Ind-vs-Ban

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி-யை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போட்டி ஒரு வரலாற்று பிரசித்தமான போட்டியாக அமையும் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்தான பல செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஒரு புதிய சாதனை ஒன்றை பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூலம் படைக்க உள்ளார். அதன்படி அவர் படைக்க உள்ள சாதனை யாதெனில் :

Kohli

இதுவரை ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே பகல் இரவு போட்டிகள் நடைபெற்று உள்ளன. அதில் முதல் ஒருநாள் பகல் இரவு போட்டியில் கவாஸ்கர் கேப்டனாகவும், முதல் டி20 பகலிரவு போட்டியில் சேவாக் கேப்டனாக இருந்தார்கள். அதனை அடுத்து தற்போது கோலி தான் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். இதன் மூலம் கோலி புதிய வரலாற்று சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -