இவ்வளவு நாள் தோனி வைத்திருந்த பெரிய சாதனையை தகர்க்க உள்ள கோலி – சாதனை விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு இந்திய அணியை தன் கையில் எடுத்த கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட தொடங்கினார்.

Kohli

- Advertisement -

அதன்பிறகு இந்திய அணி அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட துவங்கியது. இங்கிலாந்து தவிர இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இழந்த நம்பர் 1 இடத்தை மீண்டும் கோலியின் தலைமையில் கைப்பற்றியது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனியின் சாதனையை முறியடிக்க கோலிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி இந்தியாவின் சிறந்த கேப்டன் என்று கருதப்படும் தோனியின் தலைமையில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வென்றுள்ளது. தோனிக்கு அடுத்த இடத்தில் கங்குலி 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போதைய இந்திய அணி கேப்டன் கோலி 47 டெஸ்ட் போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார்.

Kohli

கோலியின் தலைமையில் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டித் தந்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனைகளை அடுத்தடுத்து குவித்து வரும் கோலிக்கு மற்றொரு சாதனையாக இது அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement