அப்பாடா ஒருவழியா கோலி நல்ல முடிவை எடுத்துட்டாரு. நாளைக்கு செம ட்ரீட் தான் – விவரம் இதோ

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Kohli

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக விராட் கோலியின் பேட்டிங் இடமாற்றம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் வழக்கமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் இறங்கி பல்வேறு சாதனைகளையும் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி ராகுலை அணியில் சேர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தனது மூன்றாவது இடத்தை அவருக்கு விட்டுக்கொடுத்தார்.

கோலியின் இந்த இடமாற்றம் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் 3 ஆம் இடத்தில் நன்றாக ஆடி வரும் கோலி ஏன் இந்த தேவையில்லாத இடமாற்றத்தை செய்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நாளைய போட்டியில் கோலி மீண்டும் மூன்றாவது வீரராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூழ்நிலைக்கேற்ப அணியில் மாற்றங்களை செய்துவரும் கோலி நாளைய போட்டியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அணியை வழிநடத்த உள்ளார்.

Kohli

அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு கோலி திரும்பி உள்ளார். இதனால் நாளைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்றமுறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளதால் இந்த தொடரை கைப்பற்றிய ஆக வேண்டும் என்ற முனைப்போடு நாளைய போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -