கிரிக்கெட் வரலாற்றிலே கோலி ஒருவரிடம் மட்டுமே இந்த சாதனை உள்ளது – சாதனை விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பேட்டியின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை குவித்து வரும் அவர் தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் குவித்து அசத்தினார்.

Kohli-4

ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து வடிவத்திலும் சிறப்பாக விளையாடி எதிரணிகளை கலங்க வைக்கும் இவர் நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகளை படைத்துக் கொண்டே செல்கிறார். அவருடைய பேட்டிங் சிறப்பு யாதெனில் மற்ற வீரர்கள் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி விட்டு மீதமுள்ள மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாட மாட்டார்கள் என்றால் கோலி 10 போட்டிகளில் 8 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் ஒன்று அல்லது இரண்டில் மட்டும் சொதப்பல் ஏற்படும்.

- Advertisement -

இந்த அளவுக்கு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி புகழின் உச்சத்தில் தற்போது கோலி இருக்கிறார். இந்நிலையில் அவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரிய வரலாற்று சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளார். அது யாதெனில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்து வடிவங்களிலும் 50 ரன்களை சராசரியாக வைத்துள்ள கோலி கிரிக்கெட் வரலாற்றிலேயே இந்த அளவு போட்டிகளில் விளையாடி 50 ரன்களை சராசரியாக வைத்துள்ள உலகில் ஒரே ஒரு வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

மேலும் அவரது இந்த சாதனையை ஐஐசிசி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கோலியின் இந்த சாதனைக்காக கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement