ஒருநாள் கிரிக்கெட் போட்டி. அசைக்க முடியாத இடத்தில் கோலி. இரண்டாவது இடத்தில் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகியவற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆன ஐசிசி நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் சர்வதேச அணிகளுக்கான ஒருநாள் போட்டிகளில் பட்டியலில் இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Rohith-2

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2-1 என்ற நிலையில் ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 121 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பட்டியல் பொருத்தவரை விராட் கோலி 886 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 868 புள்ளிகளுடனும் உள்ளனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பாபர் அசாம் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் உள்ளனர் மற்றபடி இந்திய வீரர்கள் யாரும் டாப் 10க்குள் பேட்டிங் தரவரிசையில் இடம்பெறவில்லை. ஷிகர் தவான் 7இடங்கள் முன்னறி 15 ஆவது இடத்திலும், ராகுல் 50-வது இடத்திலும் உள்ளனர்.

Bumrah-1

பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்திலும் பும்ராவும், டிரென்ட் போல்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். முஜிபுர் ரஹ்மான் மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆல்ரவுண்டர் தரவரிசையில் பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement