நான் சொல்றேன் ரிவியூ எடுங்க. ரோஹித்துக்கு கட்டளையிட்ட விராட்

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பந்து வீசும் என்று தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 157 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த முதலாவது டி20 போட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் இந்திய அணியில் இடம் பெற்றன. அதிலும் குறிப்பாக இந்திய அணி பந்து வீசும்போது கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் கேப்டன் விராட் கோலி ரிவியூ எடுக்கச் சொன்ன சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

அதன்படி இந்த போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் எட்டாவது ஓவர் வீசும்போது ரோஸ்டன் சேஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த ஓவரின் 5-வது பந்தை ரவி பிஷ்னோய் வீசிய பந்து பேட்மேனின் காலில் லேசாக உரசிய படி கீப்பரிடம் சென்றது. ஆனால் அதற்கு அம்பயர் ஓயிடு கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் அந்த பந்து பேட்ஸ்மேனின் காலை உரசி சென்றதன் சத்தம் கேட்ட விராட் கோலி பந்து பேட்ஸ்மேனை கடந்த சென்றபோது லேசாக சத்தம் கேட்டது. நீ ரிவ்யூ கேள் என்று ரோகித் சர்மாவிடம் கூறினார். சில நொடிகள் ரோஹித்திடம் பேசிய அவர் அதில் கூறியது மைக்கில் பதிவாகியுள்ளது. அதன்படி விராட்கோலி கூறியதாவது : நான் சொல்கிறேன் ரிவ்யூ எடுங்க என்று விராட் கோலி சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : இந்த ஆண்டிற்கான மும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் முழு அணி இதுதான் – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

இதன் பின்னர் ரோகித் சர்மாவும் ரிவியூ எடுத்தார். அந்த ரிவியூ-வில் பேட்ஸ்மேன் அவுட் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் பந்து ஒயிடு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் போதும் விராட் கோலி இதேபோன்று ரோகித் சர்மாவை ரிவியூ எடுக்குமாறு சொல்லியிருந்தது இணையத்தில் பெருமளவு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement