ஓய்வு அறிவிப்பை வெளியிட இருந்த நேரத்தில் இவரின் வேண்டுகோளால் தான் தோனி ஓய்வு முடிவினை தள்ளி வைத்தார் – வெளியான சீக்ரெட்

Dhoni-1

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. ஐ.சி.சி யின் மூன்று வகையான கோப்பைகளை வென்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஓய்வு குறித்து தோனி இன்னும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

Dhoni

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மட்டும் விளங்குவதாக தோனி கூறியுள்ளார். அதனால் அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய ராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற இருக்கிறார். தோனி தனது ஓய்வு முடிவை மாற்றியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உலக கோப்பை தொடருக்குப் பின் ஓய்வு பெறும் முடிவில்தான் தோனி இருந்தாலும் ஆனால் அப்போது தோனியிடம் சென்ற கோலி : இப்போது ஓய்வு பெற வேண்டாம், கொஞ்சம் காத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

- Advertisement -

கோலியின் இந்த வேண்டுகோளுக்காக தோனி தன் முடிவை மாற்றி உள்ளார் என்று கோலியின் நெருங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தோனிக்கு உடற்தகுதி பிரச்சினை எதுவும் இல்லை அதனால் அணிக்கு தேவையென்றால் 2020 டி20 உலக கோப்பை வரை அவரால் சிறப்பாக விளையாட முடியும். மேலும் ரிஷப் பண்ட் ஆட்டத்தில் மேம்பாட்டை கொண்டுவர தோனி அணியில் இருந்தால் அது உதவியாக இருக்கும் என்பது கோலியின் எண்ணம்.

Dhoni

அதோடு பண்ட்க்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் தோனியை அவர் அவ்வப்போது இறக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இன்னும் சில காலம் தோனியை அணியில் வைத்திருக்க வேண்டும் என்று கோலி நினைத்ததாகவும் இதற்காக ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டாம் என்று கோலி தோனியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் தோனி தன் முடிவை மாற்றி உள்ளார் என்று கோலிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement