ஐ.சி.சி யோசனையின் படி 4 நாள் டெஸ்ட் போட்டி வைத்தால் இதுதான் நடக்கும் – கேப்டன் கோலி ஆவேசம்

ஒருநாள் போட்டி மட்டுமின்றி டி20 போட்டிகளிலும் அதிக அளவு தற்போது நடத்தப்பட்டு வருவதால் கிரிக்கெட்டின் பாரம்பரிய போட்டியான டெஸ்ட் போட்டிகளில் வரவேற்பு குறைந்தது. அதனைத் தொடர்ந்து மக்களிடையே மீண்டும் டெஸ்ட் போட்டியின் வரவேற்பு அதிகரிக்க ஐசிசி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை அறிமுகப்படுத்தியது.

shami

பல நாடுகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய போதிலும் இந்திய அணி கடந்த சில மாதங்களுக்கு முன்பே பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலியின் உந்துதலால் முதல் பகல் இரவு போட்டியை விளையாடியது. இந்நிலையில் காலத்துக்கு ஏற்ற மாதிரி டெஸ்ட் போட்டியை மாற்றவேண்டும் என்று தற்போது ஐசிசி 5 நாட்களுக்கு பதிலாக நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான ஆலோசனையை தொடங்கியுள்ளது.

மேலும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ஐ.சி.சி க்கு அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் பல அதிருப்தியான கருத்துகளைச் சொல்லி வர தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஐ.சி.சி.யின் இந்த புதிய யோசனைக்கான தனது கருத்து ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Shami

டெஸ்ட் போட்டிகளை ஐந்து நாட்கள் இருந்து நான்கு நாட்களாக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது என்னைப்பொறுத்தவரை தவறான விடயமாகும். டெஸ்ட் போட்டி நடத்தப்படும் நாட்களை மாற்றக்கூடாது டெஸ்ட் போட்டிகளில் பகலிரவு போட்டியாக நடத்துவதே வர்த்தகரீதியாக நகர்த்துவதற்கும், பொழுதுபோக்கு அம்சங்களையும் அதிகரிக்க போதுமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் எனக்கு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியை குறித்த யோசனையில் நம்பிக்கை கிடையாது.

- Advertisement -

Kohli 1

பகலிரவு போட்டியே டெஸ்டில் பெரிய மாற்றம் இதற்கு மேல் அதில் மாற்றம் செய்து அவசியம் ஒன்றுமில்லை. இப்படியே சென்றால் நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி அப்புறம் சில ஆண்டுகள் கழித்து மூன்று நாட்கள் டெஸ்ட் போட்டி என்று ஆலோசனை கேட்பார்கள். அப்புறம் ஒருவழியாக டெஸ்ட் கூடிய விரைவில் காணாமல் போய்விடும் என்னுடைய கணிப்பின்படி டெஸ்ட் போட்டிக்கு இந்த ஆலோசனை சரியானது இல்லை. டெஸ்ட் பாரம்பரியம் மிக்க ஒரு கிரிக்கெட் வகை ஆகும் என்றும் கோலி ஆவேசமானகருத்தினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது