கோலி – வில்லியம்சன் நட்பு இவ்வளவு ஆழமா ? – ரசிகர்களை நெகிழவைத்த தருணம் – விவரம் இதோ

Williamson
- Advertisement -

கிரிக்கெட் என்பது பொதுவாகவே ஜென்டில்மேன்களின் விளையாட்டு என்பதை கடந்த சில ஆண்டுகளாகவே நாம் கண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சனின் மென்மையான குணத்திற்கு உலகெங்கிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும் ரசிகர்களுக்கு உலகம் முழுவதும் உள்ளனர்.

Williamson-1

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு நடந்து கொண்ட விதம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எப்போதுமே களத்தில் இரண்டு அணியின் கேப்டனாக அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் களத்திற்கு வெளியில் அவர்களது நட்பு அனைவரையும் வியக்க வைத்து வருகிறது.

கோலி நியூசிலாந்து சென்றாலும் சரி, வில்லியம்சன் இந்தியா வந்தாலும் சரி இருவரும் உரையாடுவது, பவுண்டரி லைனில் அமர்ந்து பேசுவது என இருவரும் தங்களது கிரிக்கெட் அனுபவங்களைப் பகிர்வது மட்டுமின்றி தங்களுக்கு இடையேயான நட்பையும் ஆழமாக மாற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற பிறகு கோலியின் அருகில் வந்த வில்லியம்சன் அவரை மனதார கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

williamson 1

கோலியும் வில்லியம்சனை வாழ்த்திவிட்டு மைதானத்தில் அவரை கட்டியணைத்து பாராட்டிய விதம் தற்போது கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறது. உலகின் முன்னணி வீரர்களாக திகழும் கோலி மற்றும் வில்லியம்சன் ஆகியோர் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டிலிருந்து ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடி வருகின்றனர். அதே போல் தங்களை உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிக்கொண்ட அவர்கள் தேசிய அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகின்றனர்.

அப்போதிலிருந்து இப்போது வரை அவர்கள் இருவரும் தங்களுக்கு உண்டான நட்பை அருமையாக கையாண்டு வருவது ரசிகர்களிடையே வியப்பை உண்டாக்கியுள்ளது. கோலி மற்றும் வில்லியம்சன் ஆகியோர் கட்டி அணைத்துக் கொள்ளும் இந்த நெகிழ்ச்சியான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement