விதிமுறையை மீறிய இங்கிலாந்து வீரர். அம்பயருடன் சண்டையிட்ட விராட் கோலி – நடந்தது என்ன ?

Haseeb-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 191 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

thakur 1

அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அம்பயருடன் வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஹஸீப் ஹமீது நேற்றைய முதல் நாள் போட்டியின்போது ஏழாவது ஓவரில் பேட்டிங் கார்டு எடுத்து களத்தில் நின்றார் அவர் செய்த இந்த செயலே கோலியை எரிச்சலுக்கு உள்ளாகியுள்ளது. ஏனெனில் அவர் கிரீஸை விட்டு வெளியே நீண்ட தூரத்தில் கார்டு எடுத்தார்.

haseeb

ஆனால் கடந்த போட்டியின்போது ரிஷப் பண்ட் கிரீசை விட்டு வெளியே நின்று விளையாடக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் தற்போது கிரீசை விட்டு வெகுதூரத்தில் அவர் கிரீஸ் கார்டு எடுத்தது கோலியை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக விராட்கோலி நேரடியாக நடுவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்தார்.

மேலும் அவரின் ஸ்டான்ஸ் குறித்த தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இந்த செயல் தற்போது வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் ஹசீபின் ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பும்ரா பந்துவீச்சில் அவர் 12 பந்துகளில் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement