ஆண்டர்சன் பேட்டிங்கிற்கு வரும்போது கோலி மற்றும் சிராஜ் கொடுத்த வார்னிங் – வைரலாகும் வீடியோ

siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணி வீரர்களை சீண்டுவதும், இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணி வீரர்களை சீண்டுவதும் என போட்டி பரபரப்பாகவே சென்றது என கூறலாம்.

siraj 1

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வரும் போது இந்திய அணி கேப்டன் விராட்கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் அவரை நோக்கி எச்சரிக்கும் விதத்தில் சில செயல்பாடுகளை செய்தது தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதன்படி தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து கொண்டிருக்கையில் கேப்டன் கோலி சிராஜை நோக்கி அவர் பேட்டிங் செய்யும்போது பந்தை தலை உயரத்திற்கு தொடர்ந்து பவுன்சர் வீசும்படி சைகை செய்தார். அதனை கவனித்த சிராஜ் தலைப்பகுதியில் தட்டி நிச்சயம் அதே போன்று பவுன்சர்கள் தான் நான் வீசப் போகிறேன் என்பது போல கோலியிடம் சைகை காண்பித்தார்.

siraj 1

ஆண்டர்சன் களம் இறங்கி வரும் போதே அவரை எச்சரிக்கும் வகையில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் செய்த இந்த செயலானது தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ :

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக விளையாடிய சிராஜ் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுமட்டுமின்றி புதிய பந்தாக இருந்தாலும் சரி, பழைய பந்தாக இருந்தாலும் சரி தனது அபாரமான பந்து வீச்சினை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement