வெளியான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் தரவரிசை நேற்று வெளியானது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார்.

Kohli-3

- Advertisement -

895 புள்ளிகளுடன் விராட் கோலி பேட்டிங்கில் முதலிடத்திலும், பவுலிங்கில் 797 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். பேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தற்போது அசத்தி வரும் ரோகித்சர்மா 734 புள்ளிகளுடன் பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

மேலும் ஆல்ரவுண்டர் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்திலும் ஆர்டிக் பாண்டியா பத்தாவது இடத்தில் உள்ளார். தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அடுத்ததாக டிசம்பர் மாதம் 15ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement