என்னதான் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் கோலியும், ரஹானேவும் எப்படி சொதப்புனாங்க தெரியுமா ? – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் மொமினுள் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசியது.

Shami

அதன்படி முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணி துவக்க வீரர்கள் இருவரது விக்கெட்டையும் 12 ரன்களுக்கு இழந்தது. அதன் கேப்டன் மொமினுள் ஹக் மற்றும் ரஹீம் ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடினாலும் அவர்களுக்குப் பின் வந்த வீரர்கள் யாரும் நிலைக்கவில்லை. இறுதியாக இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒருபுறம் சிறப்பாக பந்துவீசி அசத்தி இருந்தாலும் மறுபுறம் இன்று பீல்டிங் சற்று சுமாராக இருந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் அஷ்வின் பந்துவீச்சில் ரஹானே சில கேட்சுகளை தவறவிட்டார். அதேபோன்று கோலி பொதுவாக எந்த கேட்சையும் எளிதில் விடமாட்டார்.

Rahane

அனால் அவரும் இன்று உமேஷ் யாதவ் பந்துவீச்சில் முஷ்டபிஸுர் ரஹ்மான் கொடுத்த கேட்சை மூன்றாவது ஸ்லிப்பில் தவறவிட்டார். இவர்கள் இருவரும் மிகச்சிறந்த பீல்டர்கள் தான் மேலும் இதுபோன்று பொதுவாக கேட்சை விடுபவர்கள் கிடையாது என்றாலும் டெஸ்ட் போட்டிகளில் கேட்ச் பிடிப்பது என்பது மிகவும் அவசியம் எனபதை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

Advertisement