வேதனையிலும் ஒரு சாதனை படைத்த கோலி மற்றும் பொல்லார்ட் – இதை கவனிச்சீங்களா ?

Indvswi
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Rahul

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ஆகியோருக்கு ஒரே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் அதை தற்போது வைரலாக்கியும் வருகின்றனர். அது யாதெனில் முதலில் பேட்டிங் செய்யும் போது இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடிய பின்னர் கோலி பேட்டிங் செய்ய வந்தவுடன் “கோல்டன் டக்” அதாவது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதே போல வெஸ்ட் இண்டீஸ் ஓரளவு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பின்னர் பின்வரிசையில் இறங்கிய பொல்லார்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே “கோல்டன் டக்” ஆகி வெளியேறினார். இது போன்று ஒரே போட்டியில் இரு அணி கேப்டன்களும் “கோல்டன் டக்” ஆவது என்பது ஒரு அரிய விடயம் என்று இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் ட்ரென்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு அணி கேப்டன்களுக்கும் இப்படி கோல்டன் டக் ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement